பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62


அந்த்ரேய் பாஸர்

காபரோவ்க்,

(பி. 1925)

உருசியக் கூட்டரசு


புகைக்குழல்

முதியவென் கோவின் கதைஇது வாகும்;
மீன்பிடி படகுடன் கடலில் சென்றனன்,
குதித்துப்பின் கரைக்கு மீண்டதும் தன்புகைக்
குழாயை இழந்தது உணர்ந்து வருந்தினான்.
இதனை அறிந்தனர் அவனின் தோழர்கள்
இறுதியில் வென்கோ தலைவனை அணுகினான்.


‘வீண்மொழி பேசி நிற்றல் வேண்டிலேன்
விசைப்படகு எனக்கு வேண்டும் தருகவே,
தாண்டினேன் இன்றுநான் ஆமூர்க் கப்புறம்
தவற விட்டனன் என்புகைக் குழாயினை’
ஆண்டில் முதிய வலைஞன்ன் சொல்லுவா :
‘அஃதிலை என்றால் நடைப்பிணம் நானே.”


சிரித்தனர் அனைவரும்; முதுமையின் கோலமா?
இழந்தபுன் குழலுக்கு இத்தனை சீற்றமா?
பரிவுடன் தலைவன் வென்கோவிற்கு இயம்புவான்:
‘படகுபோய் விட்டது மீண்டிடாது ஐயனே
உரியதுஒன்று என்றால் தள்ளு படகினை
ஓட்டச் சொல்லுவேன் உனக்கு’ என்று இயம்பினான்.