பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

போரிஸ் பாஸ்டர்காக் உருசியக் கூட்டரசு

(1890-1960)

எல்லாவற்றிலும் நான் அறிய விரும்புவது

அனைத்தி லும் நான் அறிய முயல்வதோ அடிப்படை மெய்ப்பொரு ளையே. முனையும் நாள்ளலாம் தேர்வு செய்தொழில் முழுமன உணர்வில் மூழ்கலே.

கடந்த காலத்தின் சார்ம், யாவினும் கால்கொண்டு ஊன்றும் அடிப்படை, இடங்கொள் மூலம் உயிர்ப்பு,உள் உளவுகள் யாவினுக்கும் விளக்கம் வேண்டுவேன்.

விதியின் பேரலைக் குழப்பம் ஒர்தலும் விளையும் நிகழ்ச்சிகள் நோக்கலும் வதிதல், உணர்தல், நல் அன்பு, சிந்தனை, வாழ்வு கண்டிட வேட்கிறேன்.

உருச்ச மைதிட உள்ள வல்லமை உணர்வு போதும் என்று உரைத்திடில் அருமைக் காதலின் அங்கக் கூறினை

அடிகள் எட்டினுள் பகுப்பனே.

I 55