பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதால் வியப்படைய வேண்டியதில்லை. கீழ்நாடுகளில் மிர்ஸோ துர்சூன்ஜாட்டின் நூல் எவ்வளவு புகழ்பெற்றுள்ளது என்று கற்பனை செய்வது கடினமாய் இருக்கின்றது. தாகிஸ் தானில் அறிவாளிகள் அனைவரும் பார்சியைத் தெரிந்துள்ளனர். மிர்ஸோ துர்குன்ஜாட் தமது சொந்தப் பாடலைப் படித்தபோது அதை அவர்கள் புரிந்துகொண்டதுடன் முழு மகிழ்ச்சியுடன் கற்றனர். அங்கு முதலில் ஒரு பிரதிநிதிக்குழு சென்றபோது சோப்ரனோவ், ஆய்பிக், மி ர் .ே ஸ ரி துர்சூன்ஜாடேட் ஆகியோருடன் நானும் இருந்தேன். நாங்கள் பாகிஸ்தானின் எல்லையில் ஒரு மலைப்பகுதியில் மிக ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் மகிழ்வுந்தில் சென்று தாண்டினோம். முதிய ஒரு பாகிஸ்தானி ஆனவர் எல்லைக்காவலர் தலைவர், அவர் எங்கள் பாஸ்போர்ட்டைக் காணக்கூடவில்லை. ஆனால், அவர் நான் உயர்ந்த சோவியத்துப் புலவர், மிர்ஸோதுர்சூன் ஜாடேடிற்குப் பாகிஸ்தான் மண்ணில் நல்வரவு கூறுகிறேன்’ என்றார். பின் அவர் எங்களை ஒரு குளிர்ந்த அறைக்கு இட்டுச் சென்றார். அவர் கையைத் தட்டியதும் எங்களுக்குத் தேநீர் அளிக்கப்பட்டது. அவர் மீண்டும் கைதட்டியதும் ஒருவர் பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவிஞர் இக்பாலின் புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த எல்லைக் காவலர் தலைவரும் மிர்ஸோ துர்குன்ஜாடேயும் செய்யுள்களை ஒப்புவிக்கத் தொடங்கினர்.

அஃது ஒர் அரிய காட்சி. கவிதை எங்களுக்குச் சாலையைத் திறந்துவிட்டது. பாடல்கள் மனிதன்மீது மனிதன் வைத்திருக்கும் உயர்ந்த நம்பிக்கையைப் போன்று ஒலித்தன. பின் நீண்ட இடை வெளிக்குப் பிறகு நாங்கள் அதே சாலையின் வழியே திரும்பும் போது எல்லைக் காவலர்தலைவர் எங்களைப் பக்கத்திலிருந்த மலைக்கு அழைத்துச் சென்று அங்கே அவர் நட்ட செம்மலரைக் காட்டினார். “இந்தச் செம்மலர் கவிஞர் இக்பாலின் தோட்டத்திலிருந்து வந்தது. முழுமதி நாளன்று நான் இங்கு வருவேன். இக்பாலின் பாடல்களைச் செம்மலர்களுக்குப் பாடிக் காட்டுவேன்.’

இக்பால் ஓர் உயர்ந்த கீழைநாட்டுக் கவிஞர். அவர் பாகிஸ்தான் நிலத்திலே பிறந்தார். அவரது கல்லறை லாகூரிலுள்ளது. அவரது கவிதைகளில், தத்துவக் கவிதைகள் நம் புரட்சிக்கு ஊற்றமான இலெனினைப் போற்றி உரைக் கின்றன.

கீழை இலக்கியங்களிடையே உள்ள நட்புறவு, அமைதி இயக்கத்தினை வலுப்படுத்த உதவின. தாஸ்கண்டில் நடை

xvii