பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவி னைப்பயன் விலக்கு றுங்கனி வாய்ப்பைப் பற்றிய நிழலையும், ஆவற் பாய்ச்சல், விடாமு யற்சிநம் அங்கை முழங்கையும் எழுதுவேன்.

சட்டம் விளக்குவேன் நீதி யின்முறை சார்ந்த முதல்நிலை காட்டுவேன், பெற்ற புகழினர் அவர்தம் முற்பெயர் பேசுவேன் எளிதில் பேசுவேன்.

செப்ப னிட்டபூந் தோட்ட மாகஎன் செய்யுள் சீர்செய முயலுவேன். ஒப்ப வே.இரு பக்கம் ஓங்குஎலு மிச்சை யாம்எழிற் பாடலே.

புதிதாய் வெட்டிய வேலி யின்மணம் பொழியும்; செம்மலர், புல்வெளி மிதிக்கும் வெட்டிய வைக்கோல் கோரைகள் மின்னும் இடிக்கும்என் பாட்டிலே.

பூங்கா, தோப்புகள், பழந்தரு தோட்டம், பொலியும் கல்லறை யாவையும் பாங்காய் சோப்பின் படைத்தது போலப் படைப்பேன் வியப்புறு காட்சியே.

விளையாட் டிற்கும்மன வேதனைக் கும்இடை வெற்றி யின்கொடி வீறிடும்...... வளையா வில்லின் நாணி ருந்திசை வார்க்கும் வில்லிசை பாடிடும்.

1 56