பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அலெக்சாண்டர் ப்ரொக்கபியேவ் உருசியக் கூட்டரசு (1900-1971)

இரண்டாம் நாள்

அரோரா கப்பல் வாழ்த்து வெடியொலி மடிந்ததுவே அதனின் உடலை நீவா ஆறு கடந்ததுவே. இராவும் இருளும் வந்தன, விண்மீன் விழித்தனவே நீவா உறங்கி இன்கன வதனில் ஆழ்ந்ததுவே.

புதுயுகம் ஒன்றைப் பெற்றிடத் தொல்லைப் பட்டதுவே....... கடுமைத் தோற்றமும் களிப்பின் மிகுதியும் கலந்தனவே. மதுகை மிகுந்த வைகறைப் பொழுது புயல்எனவே மண்ணின் மடியில் பெட்ரோ கிராடில் புலர்ந்ததுவே. மக்கள் இனிமேல் போரைப் பற்றிப் படியாரே மாய்க்கும் வாள்கள் ஏர்க்கொழுவாக மாறினவே. திக்குகள் எட்டும் இந்தச் செய்தி பெற்றனவே எத்தனை எத்தனை மக்கள் விரும்பி எதிர்பார்த்தார். அரோரா மீண்டும் வெடித்து உரத்துப் பேசியதே, ஆனால் இம்முறை வானொலி மூலம் அழைத்ததுவே, சரேல்என எங்கும் எவர்க்கும் விரைந்தது ஒருசெய்தி: நட்புறவு அமைதி நானில மக்கள் வாழியவே.

I 57