பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்மறவனின் நெஞ்சம்

துப்பாக்கிச் சனிய னாலே, பிளந்தது படைஞன் நெஞ்சம் எப்பாங்கும் குருதி வெள்ளம் இடையிலே அவன்கி டந்தான்.

கல்லறைக் குள்ளே மெல்லக் கண்பனித்து இறக்கி றார்கள் வல்லவன் களத்தோ ழர்கள் வெடிப்பொலி வழங்கி னார்கள்.

மதிப்புற வளிக்க மாலை பீரங்கி முழக்கி னார்கள் எதிர்த்தெழு புகையின் நீலம் குமுறியே வழிய னுப்பும்.

நீலவா னிருந்து விண்மீன் நிலத்தினை நோக்கும் எங்கும் நீலஞ்சேர் காற்று மிக்க நினைவென விரைந்து வீசும்.

வீரப்போர் மறவன் வீழ்ந்தான் மறைந்தது வல்லுாறு ஒன்று வீரனின் மனையாள் வாழ்வின் விளைவினை நுகர வேண்டும்.

புரட்சிப்போர் வீரன் ஆங்கே பொங்கியே கத்த லுற்றான்

“இறந்திடேன் இறக்க மாட்டேன் இறப்பெனக்கு இல்லை

1இல்லை. ’

மூடிய கல்ல றைக்கல் மூச்சுவிட் டதிர்ந்து வீழும் நீடிய மரமாம் ஆப்பிள் நெஞ்சிருந் துயர்ந்த தோங்கி.

கோப்புடன் கிளைகள் ஓங்கிக் குளிர்நிழல் அளித்து உவக்கும் சேப்புவெண் திரையாய்ப் பூக்கள் கல்லறை சிறக்கக் கொட்டும்.

மலையிருந் தோங்கும் காற்றில் அசைந்திடும் மறவன்

(நெஞ்சாய்க் குலையிருந்து உயிர்த்து டிப்புக் குன்றிடாது இசைக்கும் துள்ளும்,

I 58