பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பால். இரிக் ரும்மோ எஸ்தோனியா (. 1942)

கெஞ்சிலோர் இரும்புத்துண்டு

அவன்ஒரு படைஞன் ஒரோனிஷ் அருகே அவன்மனையாம் அடர்மீன் துளைத்த வான்,குளிர் ஒளிமை ஆங்குமிழும். பிறந்திருந் தேன்நான் அப்பொழுது யாவரும் எனைச்சூழ்ந்தார், பெண்மகள் உடைக்குள் சீர்பெற்று இன்ப உணர்வுற்றேன்.

எங்கோ நடந்தது அந்த நிகழ்ச்சி யான்அறியேன்: எரியும் பிணிமனைப் படுக்கைபோற் பணியும் மடிந்துவிழும், அங்கோ பறவை, பரிதி, ஒருமரம் கூடஇலை! அவனோ நெஞ்சில் அடியொன்று பட்டான்; இறக்கவிலை.

ஒருவரை ஒருவர் எவ்வகை அறிவோம்? அவனுடைய உட்புண் ஆறிற்று; நானும் வளர்ந்தேன், பள்ளிசென்றேன் இருபதாண் டின்பின் தாளிகை கண்டேன்; துணுக்குற்றேன். நெஞ்சில் இரும்புத் துண்டுடன் வாழ்ந்தான் என்றறிந்தேன்.

பள்ளித் தேர்வு சிறுவன் நெஞ்சை அழுத்துகையில், தங்கை முதற்பேறு வந்துதன் நெஞ்சில் தாங்குகையில், உள்ளே இரும்புத் துண்டை நெஞ்சில் வைத்திருந்தான். ஒகோ! இருப தாண்டாய் நெஞ்சும் உறுதியதே.

16.2