பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

பருயிர் சேவாக் அர்மீனியா

(1924-1971)

உலகத்தின் கணிப்பானுக்குரிய உழைப்பும் துல்லிய மானிகளும் (ஒரு பகுதி)

கணக்கெடுக் கின்றீர், கணக்கெடுக் கின்றீர் நிற்கா மல்நீர் கணக்கெடுக் கின்றீர்......... எங்கே, இதைக்கணக் கெடுங்கள் பார்க்கலாம்: ஒரிளம் பெண்ணின் உள்நெஞ் சிருந்து, மின்னிக் கொழிக்கும் கன்னஞ் சிவந்திட, எளிதாய் நாமெலாம் நாணம்என் றிசைக்கும் அணுக்கதிர்ச் சுடர்ஒளி மினுமினுப் பேற்றிட, எவ்வெவ் அலைகளில், எத்துணைக் கணங்களில் எவ்வளவு குருதி விரைந்திடும் இயம்புவீர்? எதிர்பாரா வகையில் எவரையே னும்யாம் கண்எதிர் காண்கையில் காற்று மண்டிலக் கலக்கம் தேங்கிய கண்ணைஊ டுருவும் அண்டக் கதிர்களின் அளவு தன்னையும், பார்வையும் பார்வையும் பாய்ச்சுஒளி வீச்சினால் நெஞ்சுக்கு நன்மை நிகழுமா? தீமையா? என்பதை யும்கணக் கெடுங்களேன் பார்க்கலாம்.

I 73