பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஸ்திபன் ஷிபச்சேவ் உருசியக் கூட்டரசு

(19. 1899)

மாந்தனின் உள்ளங்கை

மாந்தனின் உள்ளங் கைதான்

பரந்தகன் றிருக்கும் காணாய்;

ஏந்திடும் வலிமை ஓங்கும்

ஈடிலா ஆண்மைச் சின்னம்.

குறுக்கிலும் மறுக்கி லும்ஆழ் கோடுகள் பரந்தி ருக்கும்

நெறிப்படும் அவனின் போக்கை

தெளிவுற விளக்கிக் காட்டும்.

நெம்புகோல் அழுத்தும் போது

நெகிழ்விலாக் கடினம் கொள்ளும் கொங்கைகள் தழுவும் போதோ

கூச்சத்தால் சிலிர்த்தி ருக்கும்.

உள்ளங்கை மாந்தன் வாழ்க்கை

விரிவினைக் காட்டும் வார்ப்பு. வெள்ளமாய் அவன்பு ரிந்த

செயல்களை விளக்கும் சான்று.

I 76