பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

யுவான் ஷேஸ்தலோவ் கான்டி-மான்சி

மாவட்டம்,

(பி. 1937) உருசியக் கூட்டரசு

உருசியா

கேட்டறி யாத கேடுசெய் உறைபனி என்தாய் உயிரினைக் கொண்டு சென்றபின், கொடிய தீமையின் குறட்டுப் பிடிகள்போல் உறைபனி என்றன் உயிரையும் கவ்விச் சில்லிடச் செய்திடச் சீறிய வேளையில், உருசியா அருமைத் தாய்மை உணர்வுடன் பெருவழி காட்டும் பேரன் புடனும் தன்.அருட் கையை என்மேல் வைத்தது. அறிவினை வலிமையைத் துணிவினைக் கொடுத்தது. உணவினை வீட்டை நிலத்தினைத் தந்தது. இன்இள வேனிலின் பொன்னொளி விழிகளால் இன்புற நோக்கித் தென்புற ஊக்கி, நாளொரு மேனியும் பொழுதொரு நிறமுமாய் என்னை வளர்த்தனள் அன்னை உருசியா. தாய்மைப்பே ரன்பால் தளிர்த்தது என் நெஞ்சம் வாழ்வில் திளைத்திட வளர்ந்தன விழைவுகள். இளமை வாயிலை எய்திடும் போதில் வளமகள் இன்ப வடிவி னளாகிக்

I 81