பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

ஒலெக் ஷெஸ்தின்ஸ்கி உருசியக் கூட்டரசு

(பி. 1929)

தம்மக்கள் குழந்தைஎனின் தவிப்புடனே துயின்றிடுவர் அருளுடைய அன்னையரே : தம்மக்கள் வளர்கையிலும் தயக்கமுடன் துயின்றிடுவர் அன்புடைய அன்னையரே; தம்மக்கள் வயதடைந்தும் தணிப்பின்றித் துயின்றிடுவர் ஆர்வமுடை அன்னையரே; புனிதமிகு தூங்காமை! எம்முடைய அன்னையர்க்கே எப்படிநாம் நன்றியினை இயம்பிடுவோம்? எப்படித்தான் கைம்மாறு செய்திடுவோம்? பண்பான கைகட்கு முத்தமிடும் பற்றாலா? வெண்கூந்தல் தனைவருடும் வேட்கைமிகு விருப்பாலா? இளமையிலே தாம்மறைய எடுத்திட்ட கல்லறையில் வளரும் மலர்கட்கே தண்ணிரை வார்த்திட்டா? அன்னையர்தம் அன்புக்கே நன்றிக் கடனுண்டோ? நன்றொளிரும் செங்கதிர்க்கு நேர்உதவி செய்வதுண்டோ? மண்ணளிக்கும் விளைவிற்கு மாற்றுதவி புரிவதுண்டோ? எண்ணிலாக் காலம் எவைதரினும் ஈடாகா......! என்றாலும் நல்லசெயல் ஏதேனும் நாம்செய்தால்

}88