பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிவ் உலகினில் இயங்கும் ஞாயிறு

மறைந்த தென்னும் வேளையில்

பொங்கு பொதுமை வாணர் நெஞ்சமே பொலியும் செஞ்சுடர் ஆகிடும்.

உலகம் எங்கள் முகத்தை நோக்கியே

உழன்றுழன் றுவகை கொண்டிடும்;

உலகின் இன்முக உருள் பூழில்எலாம்

உயர்ந்தி னிமையால் ஓங்கிடும்;

மலர்செம் பருத்தி வண்ண வானுடன் வைகறைப் பொழுது அலர்கையில்

நிலவும் வாயிலில் பவழ மல்லிகை

நிறைந்து பூத்தெழில் கொஞ்சிடும்.

எங்க ளின்தொகை கோடிக் கணக்கின, யாங்கள் வாழும்இம் மண்ணினைத்

தங்கும் அன்புடைக் கையால் தாங்குவோம் தழைக்கும் நகர்களை ஒம்புவோம்;

கங்குல் வானிலே செம்ம லர்களால் கண்ம லர்ந்தன மீன்களே:

எங்கள் காலணித் துளசி மேம்பட

ஏகுவோம் தொடர்ந்தே ஏகுவோம்.

எங்கள் காலணித் துாசி மேம்பட

ஏகுவோம் தொடர்ந்தே ஏகுவோம்;

இங்கிவ் உலகினுக்கு ஏற்ற யாவையும் யாங்கள் ஈந்திட முந்துவோம்;

இங்கு வேறு புத்துலகங் கள்ளழின்

இனிது காப்பதில் ஆய்ந்துமே

அங்கண் ஞாலம் அத்த னைக்குமே

அக்க றைபொறுப் பாகுவோம்.

l 85