பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தெருவின் எதிரினிலே வாழு கின்ற அமைவற்ற இளைஞனையே வினவ வேண்டும்; பித்தானான் அவள்பேரில்! உறங்கும் போதும் பின்னழுந்து நடக்கையிலும் அவள்பேர் சொல்வான்.

பேரழகி இளஞ்சிறுக்கி லைடா’ என்று பேரன்பால் காலணிஇட்டு உலவும் பாங்கில் ஆர்வமுடன் சுண்ணத்தால் எழுதி நிற்பான் அடக்கவொணா ஏமாற்றம் அவனைத் தாக்கும்.

விடாப்பிடியாய் மங்கைபால் இளைஞன் கொண்ட வெங்காதற்கு ஊராரும் உருகிப் போவார்; விடாக்காதல் புட்கினும்தான் கொண்டான், உண்மை. வேல்விழியாள் ஐயினும்தான் விரும்பி னாளே.

விரைவினிலே அவன்வளர்வான், புகழுங் கொள்வான், வீட்டுறையும் தெய்வங்கள் தடைது றப்பான், கரையற்றுப் பொங்குகிற காத லுக்குக் கவைக்குதவா இத்தெருக்கள் குறுக்கல் தாமே.

காதலுற்றோற்கு எல்லைகள்தாம் ஏதும் இல்லை, கடும்பழியை நாணத்தை எலாம்து றப்பான். ஒதும்இந்த உலகின்நால் சந்தி தோறும் ஒள்ளிழையாள் பெயர்அதனை எழுதி வைப்பான்.

தரைக்கோடித் தென்முனையில் நெருப்பி னாலும் தண்கூபான் வெளியில்கோ துமையி னாலும் உருசியாவின் கழனிகளில் மலர்க ளாலும் ஒலிகடலில் நுரையாலும் எழுதித் தீர்ப்பான்.

பேர்எழுதும் பித்தத்தால் விரல்தீய்ந் தாலும் பேரிருளின் வான்ஏறச் சளைக்க மாட்டான்; வியனுலகின் தொடுவானுக்கு அப்பால் விண்மீன் கூட்டமாய் விரைந்தொன்றி விடுவாள் லைடா!

1 9 I