பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்குகின்ற மாசுகோவின் கனவுக் கப்பால் ஓங்கிஇவை ஒளிரட்டும் அந்திப் போதில் நிறநீல முகில்பரப்பின் பக்கந் தோறும் நிலைக்கட்டும் இவ்வினிய காதற் சொற்கள்.

ஆவணப் பெயர்ப்பேடு

மண்ணில் மறைந்ததும், துன்பம் அடக்கிக்கண் நீரைப் பொழியாமல் என்உடலை - எழும் பண்வேய்ங் குழல் எனப் பாடி முழங்கிடும் தொடர்வண்டிப் பாதைக்கு அருக மைப்பீர்.

நான்இங்கு இறந்ததும் ஒடும் தொடர்வண்டி நிலையத்தின் பக்கத்து இருத்திடுவீர் - ஒளித் தேனின் நிழல்கனிப் பீர்ச்மரக் கீழ்ஒரு சிறுகுன்றின் மேல்நான் கிடந்திடுவேன்.

இருண்டும் தனித்துமே கல்லறை தோன்றும் எனினும்அக் காரிருள் கங்குலிலே - தொடர் உருள்வண்டி கள்பறந்து ஓடிடும் போதில் ஒளிக்கிற்றும் வெம்மையும் ஓங்கிடுமே.

வாழ்வினில் பெற்ற மகிழ்வொளி தன்னை வீச்சொளி வந்து நினைவுறுத்தும் - வண்டி போழ்ந்த ஒலியடைப் புற்றும் எதிரொலி பொங்கிடும் மின்னலாய்த் தந்துஅகலும்.