பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த ஆழ ஊற்றில் இருந்தவை மண்மேல் பொங்கினவே! இனிய அகன்ற ஆறுகள் நிலங்கள் காட்டை விரும்புகிறேன், இம்மண் மலர்ந்த அழகும் என்றன் பாட்டில் நிலைக்கட்டும்.

கழியே ருவகை தந்த விதிக்கும், களத்தில் அதுபெறவே கணல்செங் குருதி சிந்திய வீரர்க்கும் நன்றி மிகவுடையேன்; துளியும் வெற்றுப் பகட்டுச் சொல்லால் மயக்குதல் செய்யேன்நான், தொட்டுச் செழிக்கும் நன்றி அனைத்தும் உள்ளார்ந்து எழுந்தனவே. வெளியில் மிகவும் உள்ளது” என்றே விம்மும் இளந்தென்றல் விரைவாய் நானும் பணியை முடிக்கச் சென்றிட வேண்டுமன்றோ ?

என்றன் பணியது உண்மை உயர்வு நன்றியை ஒலிக்கட்டும் ஈவேன் அதற்கென் அன்பும் வலிமையும் வாழ்நாள் போதெல்லாம். என்றன் செழுமை அன்பின் உயிர்ப்பில் சிலிர்த்து மேலோங்கும், எண்ணக் குரலோ அல்லும் பகலும் தலைக்குள் எதிரொலிக்கும். முன்னும் பின்னும் காலத் தைநான் முனைந்து நோக்கையிலே மூளும் நெஞ்சத் தீக்கனல் என்றும் முழங்கி எரிகிறதே.

I 34