பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

ஒல்ஷாஸ் சுலைமானவ் கசகிஸ்தான் (15, 1936)

...... நினைத்துப்பார்

ஏனோ மாந்தர் வானோக்கி எழுகிறார் ? வானில் பறக்கும் வல்லு றுகளையே உயர்வாய் நினைக்கிறார்? ஏனோ மாந்தர் தாங்கள் படைத்த அழகினை எல்லாம் “ஓங்கியது’ என்றும் உயர்வு’ என்றும் சொல்கிறார்? ஆறுகள் பாய்ந்து வீறுறும் நிலங்கள். ஆற்றுப் படுகையில் மேற்படும் நகர்கள், நாட்டின் நீல நரம்பாம் ஆற்றின் ஊட்டத் தாலே மாட்சிமை பெற்றிடும், நிலமாம் நெஞ்சம் நிமிர்ந்து பறந்திடும். மங்கிய அற்றை நாள் விண்மீன் களுக்கு வழிகளை வகுத்தல் சாலக் கடிதாம். மண்ணில் அதனினும் மிகவும் கடியது நெஞ்சில்வடு வுண்டாக்கும் வழியைக் காண்பது. அவ்வழி, நிலத்தின் குறுக்கே ஆறுசென் றிடல்போல் நகரையும் நகரையும் இணைக்கும்:

I 95