பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவ்வும் சூழ்ச்சி வேண்டும்; விரைவும் இன்னும் மிகவேண்டும்; ஒருகால் தோற்றால், மீண்டும் துரத்தித் தொடரத் தான்வேண்டும்.

தொடுவான் நிலத்தில் அடையா ளத்தைப் பொறித்தே உவந்திடுவேன்; தொலைப்பேன் வானின் வழியில் மயக்கி அழைக்கும் மரங்களையும்;

கொடிய அவன்தன் விலங்கையும் பழக்கிக் கையால் உணவிடுவேன் எனினும் அடடே விரட்ட விரட்ட இன்னும் செல்கின்றான்.

காலால் நடந்து தொடுவான் விரைவைக் கண்டிட முடியாது கடும்பரி மீதில் ஏறி அமர்ந்து கடுகி விரைந்திடுவேன்;

மேலும், தொடுவான் அறைகூ வல்தனைச் சிரித்துப் புறந்தள்ளும்: விடுத்தேன் குதிரை, படர்ந்தேன் உந்தில், எனினும் பயனில்லை.

சாலவான் ஊர்தியில் பறந்தேன் விசும்பின் மகன்என் கையிருந்து தப்புதல் அரிது சந்திப் பேன் என உறுதி மேற்கொண்டேன்.

ஆனால் வானின் சூழல் முற்றும் அங்கே மாறியதே. அடுக்கடுக் கான மலைக்கூட் டத்தின் அடிவான் விளிம்பெங்கே?

201