பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மக்சிம் தாங்க் பைலோரஷ்யா

(1%. 1912)

கோடரி

வந்தவினை அத்தனையும் கோடரியி னாலே: அந்தஇருள் காட்டுக்குள் இஃதிலையேல் செல்லேன்.

அசைந்திசைக்கும் பைன்மரத்தை வெட்டியிருப் பேனா? இசைத்தாளக் கருவிகளை வடித்திருக்க மாட்டேன்.

நெறித்தாளம் கையிலையேல் திருமணத்தேன் விருந்தில் குறிஞ்சிப்பண் பாடஎனைக் கூப்பிடுவார் யாரே?

இவ்வினிய இசையறியாது இருப்பின்அவள் அன்பும் செவ்வினிய நன்மதுவும் கிட்டியிருக் காவே.

கிண்ணங்கள் இன்சிரிப்பில் கிட்டிஉற வாடப்

பெண்ணவளும் எளியன்மனம் பிடித்திருக்க மாட்டாள்.

கங்குல்தொறும் அவள்மனைக்கு மறைந்தொளிந்து போனேன் இங்கிதெல்லாம் உண்மையிலே கோடரியின் குற்றம்.

204