பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அன்றாட உணவு

என்அரிய தாயகமே! எண்ணமெலாம் உன்றனக்கே இன்பக் கதிர்விளைவை ஏமுற்றுக் கையினிலும்; அச்சமின்றித் துரங்கும் அமைதிக் கனவினிலும்; பச்சைப் பசுந்தோப்பின் ஒவ்வோர் மரத்தினிலும், சிற்றுார்ப் பசும்புல்லில் தென்றல் மணத்துடனே பற்றார்ந்து உயிர்இணைக்கும் பாட்டின் ஒலியினிலும்; அக்கறை கொள்கின்றேன் அன்புத் திருநாடே இஃதேஎன் நாள்.உணவு ஆம்.

சாலைப் புழுதியினால் சற்றெமக்குக் கைத்ததுண்டு, காலவிழி நீர்உப்பாய் சற்றே கரித்ததுண்டு, துவும் மிளகோடு தோய்ந்துரைத்த தானாலும் மேவும்நல் நட்புறவால் மிக்க இனித்ததுவே. மிக்கெல்லாக் காலமும் வெற்றி விளைத்ததனால் இஃதேஎன் நாள்.உணவு ஆம்.

வெளியூர்நான் செல்லுகையில், மேவும்என் தோழர் அருகில் அமர்ந்து விருந்தில் அளாவுகையில் மார்பின் குறுக்கேஎன் கைகள் மடங்கையிலும் வேறோர் உணவினைப் பைக்கட்டில் வைக்காதீர் ஏலாதே என்றன் வயிறு.

206