பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

அப்தில்தா தளலிபாயேவ் கசகிஸ்தான்

(3, 1909)

இளமையும் முதுமையும்

பொங்குபெரும் வாழ்வென்னும் சாலையெலாம் திரிந்தேன்; புகழ்ந்துமதித் திடுமாந்தன் எனவாழு கின்றேன். எங்கேயோ தொலைவினிலே மலைக்கும்புல் தரைக்கும்இடையினிலே என்இளமைக் காலங்கள் வாழும்.

பழங்காலத்தை முன்னோர் கணக்கிட்டார். சொன்னார்: பழங்காலம் திருடர்போல் தந்திரம்சூழ் வழியாம்: அழகியதாம் ஒருசிறிய வாழ்வதனை மாதம், ஆண்டுகள்தாம் ஒன்றன்பின் ஒன்றாகத் திருடும்.

காலம் விரைந் தோடிடினும் நேர்மைதவ றேன்.நான், கருதுகிலேன் கடுஞ்சொல்லைக் கடிந்துரைக்க மாட்டேன்; ஒலமிடேன் இச்சொல்லைப் பறந்தோடும் காலத்து ஒருகுறையைக் குற்றம் எனப் பழித்தல்முறை இல்லை.

காலமேஎன் கனவார்வம் தனைத்தணித்தாய் இல்லை; கவிதைகளைப் பாடல்களை எடுத்துக்கொள்; ஆனால், காலமேநின் நிழலில்ஒரு சொல்லும் வீண் இன்றி மக்கட்கும் உலகிற்கும் கனிந்தீய வேட்பேன்.

207