பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மாட்ஸ் த்ராத் எஸ்தோனியா

(R. 1936)

மண்ணின் மண்ணாய்

கருமையும் கடுமையும் கலந்த பாறைபோல் மண்ணின் மண்ணாய் நான் இருக் கின்றேன். உளிகொண்டு செதுக்கிய இறுகிய கருங்கல் பாறைஎன் நெஞ்சு! அந்தப் பாறையில் காட்டு மலர்கள் ஊட்டமிட்டு உயர்ந்திடும். வாடைக் காற்றில் பாடிடும் வனமலர். என்றன் பாட்டாம் முந்நீர்க் கடற்புள் கத்துக் கத்தெனக் கத்திப் பறக்கும். சிறுவர்க்குப் பாடும் அரியதா லாட்டுப் பாடல் பங்குகள் பாடி முடித்தன; இனிஎன் பாடல் எழுச்சிப் பாடலே! ஒவ்வோர் அசையும், ஒவ்வொரு சொல்லும் மாந்த நெஞ்சின் துரங்கும் விழிகளைச் சரளைக் கற்களாய்ச் சென்றுகுத் தட்டும். குறட்டை விட்டே உறங்கும் கனவினில் போலி அமைதியில் காலம் கழிப்பவர் காதலில் நினைவெலாம் கவிழ்ந்துநிற் பாரையும்,

2 I 5