பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்குற் காவலர் தங்களை யும்.எம் சந்தப் பாடல்கள் உந்திவிரட் டட்டும்.......

சுவர்க்கோழி போல்நான் பொருள் இலாப் பாட்-ை மழைவில் புருவக் குழைவினுக் காகவும், மதுகுடித் தாடும் புதுவெறிக் காகவும். மெல்லிய இனிய நல்லிசை கொண்டு பாடேன் பாடேன், பாடவே மாட்டேன். பள்ளமும் மேடுமாய்ப் படைச்சால் நிறைந்த என்றன் நாட்டின் சொந்தக் குன்றையும் விண்வெளி தன்னையும், கல்லுளி மங்கன் பேரிரைச் சலுடன் ஏருந் தைந்தினைப் பூட்டி முதிய நாட்டின் நிலமுகம் உழுதே எழுதிடும் ஒருநூற் றாண்டின் வாழ்வையும் என்றன் பாடல்கள் நீள முழக்கி நெடுகப் பாடுமே!

2 I 6