பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மிர்ஸோ துர்சூன் ஜாடே தாஜிகிஸ்தான் (19. 1911)

என் செந்நீலக் குதிரை

என்அரும் நெஞ்சே! புகழ்கின்றேன்

இடர்கள் ஏதும் தராதவன்நீ;

செந்நீ லத்துஎழில் அற்புதம்நீ,

சிதையாத் தண்மை வலுவுடையாய்:

இன்பில் சுமையாம் வேலையிலும்

இடறாய்; நிறைவாய்ப் பணிசெய்வாய்.

நன்றாய் ஒய்வு வேண்டியே நீ

நாளும் தொல்லைப் படுவதில்லை.

ஒய்வில், லாமல் உழைக்கின்றாய்

உளைச்சல் மூச்சை விடுவதில்லை.

காலம் உன்றன் தோழனடா,

கனிந்த உறுதி தாளமடா!

வாழ்வின் அரிய புதுமைகளை

எளிதே ஏற்றுக் கொள்கின்றாய்;

சூழ்ந்துன் பங்கில் வருவோர்க்கே

ஏற்றுக் கொள்ளும் தோதுடையாய்.

2 1 7