பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டு வன்என் உயிர்நெஞ்சே!

விழைந்து உழைக்கச் சளைக்காதே;

வேண்டு கின்றது என்உள்ளம்

வாழ்வின் முடியாக் கடன் எண்ணி...

ஈண்டொ ருத்தி காத்துள்ளாள்

இதழ்முத் தத்தின் சுவைக்காக,

வேண்டித் திரும்பும் என்கால்கள் புதுநா டுகளை வேட்புற்றே.

பின்போ வதையோ நிற்பதையோ

பெரிதும் தவிர்க்க வேண்டுகிறேன்.

இன்போ தான விடியல்வரை

இரவில் கனைத்த பெருங்குரலின்

மின்போல் இனிய நுட்பமிகு

சொற்கள் நன்மை விளைவிக்க

அன்போடு இரவுப் போதெல்லாம்,

காதல் மொழிகள் ஆளவிடு!

தேவை யான நேரத்தும்,

சிறிது பொறுமை கொளவேண்டும்.

ஆவல் ஒன்று, முடிவற்ற

மக்கள் உலாவல் காண்பதுவே:

மேவும் ஆழ்ந்த பனிப்புறத்தே

வேட்புற்று உழல வேண்டுகிறேன்;

யாவற் றுக்கும் மேலாகப்

பசும்புல் தரைமேல் செலவேண்டும்.

தலைவ, அதனால் மேற்செல்வாய்,

தழுவும் காட்சிப் பொருளாவோம்.

அலையும் நமது வழிப்போக்கின்

தொடக்கம் இதுவே சோர்வென்ன?

3.18