பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலையாக் காலம் உள்ளதுவே,

சாக்காட் டிறுதி தனைச்சாற்ற

உலவும் வழியில் மூடுபனி

ஓங்கட் டும்மேல் ஆடையென.

மண்ணின் வியப்பே விரைவாகி *

மடியாது இருக்க வேண்டுகிறேன்.

எண்ணி எந்த மாந்தனுமே,

இயற்றும் பொருளா? அல்லவே நீ.

விண்ணில் கதிரோன் மறைகையிலே விரைந்து ஒலிக்கேல் சாவுமணி,

கண்ணில் தெரியும் ஒட்டகத்தின்

கழுத்தில் தொங்கும் மணிஅலc.

கருஞ்சி வப்புப் பொலிகின்ற

கனலும் வீரப் பாய்மாவே,

பெருகும் உணர்ச்சி மிகும்வரையில்

பிரியாது என்னைத் தாங்கிடுவாய்,

உருகிச் சிவந்த பொன்னாகக்

குளம்பால் கல்லில் பொறிபறக்கும்,

அருமை யாக உனை நம்பி

அமர்ந்தோன் நிலைஇல் மானுடனே.

219