பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அலெக்சாண்டர் துவர்தோவ்ஸ்கி உருசியக் (1910-1971) a-L-L-Tr


வேனில்இளங் காற்றினிலே கரைவதில்லை, இல்லை வெற்றுமணல் தரைஉறிஞ்ச வற்றுவதும் இல்லை. வீண்.எனவே எம்.குருதி சிந்தியதும் இல்லை. விளையும்புது நிலத்தினிலே பாய்ச்சியதே ஆகும்.

நாற்பதாண் டுக்காலம் மிகநீண்ட காலம் - மண்ணில்அது காயாமல் சிவந்தபடி உளது. காட்டியநல் ஈகத்தின் செங்குருதி இன்றும் காயாமல் சிவப்பாக உப்பாக உளது.

புற்கள்எலாம் பசுமைபெற மரங்கள் தழைத்து ஓங்க போற்றுவதும் வளர்த்ததுவும் போதாமல், மற்றும் இற்றைக்கும் வற்றாமல் ஒங்குசுடர் வானின் எரிகதிராய் கதிர்ஒளிரக் காணுகிறோம் நாமே.

எம்முடைய நெஞ்சினிலே துடித்ததுதான், நாடி நரம்புகளில் எங்கெங்கும் பாய்ந்தோடிக் கூடி, எம்முடனே இம்மண்ணில் மீண்டெழாத மாந்தர் ஏற்றமிகு பெருநினைவை ஊற்றெனவே பாய்ச்சும்.

220