பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

ஒஜர்ஸ் வாஸெட்டிஸ் லத்வியா

(19. 1933)

புதுத் தொடர்வண்டி வழி அமைத்தல்

இடத்தேர் வாளர்! படர்நெடுங் காலத் திற்குமுன் அவர்களைப் பற்றி அறியு முன்னரே, அவர்கள்தாம் என்றன் அரும்பெரும் வீரர்.

இப்போது நாங்கள் இணைந்தே இருக்கிறோம். கப்பும் கோரைக் களர்நிலப் பாங்கில் ஊசி இலைமரப் புதர்களின் நடுவே.

இப்புற்கள் எங்கட்கு இனியவை தாமா? எப்படி என்னால் இயம்பிட முடியும்? களைப்பால் நானும் தள்ளாடு கின்றேன், களைப்பால் என்றன் கத்தியை இழக்கிறேன்.

ஒருமாந்த னுக்கு ஒருகிண்ண இறைச்சி, ஒருமாந்த னுக்கு ஒருகோடி ஈக்கள்.

வீறுணர்ச்சி! வீறுணர்ச்சி என்றால் என்ன?

5

1 5