பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமுள் எலியை உன்கன் னத்தில் அழுத்திப்பார் தெரியும்.

வீறுணர்ச்சி1 குத்தித் தொலைக்கா திருந்தால் சரிதான். கத்தட் டும்.அது!

முயற்சியை விடுகிலோம்! கரிநெய் எனவே கனத்தும், உப்புக் கடலாய்க் கரித்தும் கண்ணில் வியர்வை வழியினும் விடுகிலோம். அந்த வியர்வை விழியை மறைத்திடும், கண்முன் இருக்கும் கருவியை மறைத்திடும். புருவத் தின்கீழ் விழிக ளாஅவை? குழிகள், பாழுங் குழிகள்!

ஆயினும், இடம்கண்டு இயங்கும் தடம்அமைப் பவரின் பெருமித உணர்வை எதுதான் முரிக்கும்? இப்பெரு மிதமும், தலைவணங் காமையும் எம்மி டத்தில் இருப்பது கண்டுதான் எங்கள்பால் யாவரும் அன்புகொள் கின்றனர். ஊசி இலைப்புதர் உடைகளைக் கிழிக்கும் ஆள்களின் ஒருவனின் கையையும் துண்டித்து எறிந்தது. அவனின் காதலி உரைத்தாள்: “இருகைக ளோடும்நீ இருந்தால் அன்ப, உன்னை முடமாய்க் கருதுவேன் நானே.

இடத்தேர் வாளர்!

என்றன் வீரர்கள்! ஊசி. இலைக்குறுங் காட்டினைத் தாண்டிடும் எங்கள் வானொலி அழைப்பினைக் கேட்டிரா? தாவாய் நடத்துநன் தன்பெருங் கப்பலைத் துறையிலோ, துறைமுகத் திலோஇ லாமல் இடையில் நிறுத்தினான் எதற்கு நிறுத்தினான்?

226