பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீயி னால் நிலம் கருகிப் பாழ்படத் தீயினால் மனைகள் வீழ்வுறத் தீயி னால் புகைக் கூண்டு கள்பட

வெறுமைச் சின்னமாய்க் காண்கையில், வாழ்வி னில்பலம், இளமை கொண்டர்ே

பசுமை சேர்முளை ஓங்கிடச் சூழ்ந்து காப்பதென் கடமை என்று நான்

சூள் உரைத்து உறுதி பூண்டுளேன்.

நாட்டை யேநெருப் பாறு சூழ்ந்துபாழ்

நரக மாக்கிவிண் ஓங்கையில் கேட்டைக் கண்டுநான் நின்னு டன்மனம் கிடந்து துன்பினால் ஏங்குவேன்; வேட்டை ஆடிடும் கொடிய வெந்தழல்

விண்மு கத்தினைத் தீய்க்கையில் கேட்டில் ஒர்மகள் தன்னந் தனியளாய்க் கிளர்ந்து விம்மிட விம்மினேன்.

அடர்ந்து எரிந்திடும் புகைத்தி ரைவழி

அல்லல் கள்மிகுந் திருப்பினும், கிடந்து போர்வெறிக் குண்டு கள்தரும்

நிலம்.அ திர்ச்சியின் போதினும், படர்ந்து அரத்தமே தோய்ந்த புல்வெளி

இடைந டந்தனென் தேசமே! தொடர்ந்து சென்றுனை அடைந்தி டும்.ஒரு

வழிஅ மைத்துளேன் ஏற்கவே.

முறிந்த ழிந்தபோர் உந்து கள்பணி

மூடி டும்வழி யூடெலாம் இறந்த தாய்உள மரத்துப் போனஎன் உடலி னால்தவழ்ந்து ஊர்ந்துமே, சிறந்த வெற்றியும் இறுதி வேளையில் சேர்த்த னன்எனது ஆருயிர்ப் பிறந்த நாடுநீ வெற்றி பெற்றனை

வளரு வாய்எனக் கூறினேன்.

23 1