பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதிப் போதினில் வானில் மின்னியே

அரும்பி டும்உடுத் தொகுதிபோல், இமைநெ ரித்திடும் உச்சியில் சற்றும்

ஒய்வில் விண்ணிலே பொலிகிறாய்! இமைதி றந்துயிர் எங்கும் ஓங்கிடக் கோடை மாரியின் வெள்ளமாய் அமையும் எண்ணில உயிர்கள் தோன்றிடும்

அருமைத் தாயகம் ஆயினை.

என்றன் தாயகம்! என்றன் பாடலை

நெஞ்சு உவந்து நீ ஏற்பையேல், பொன்றல் இன்றியே பொலியும் நின்ஒளி புணர்ந்தி டச்செய வல்லையேல், என்றன் ஊனுடல் மாயும் எனினும்என்

பாடலுக்கு இறப்பு இல்லைகாண்; மன்னும் மானுட வாழ்வைப் பாடிடும்

புத்தெ ழுச்சியைப் பாடுமே.

232