பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஆரன் வெர்கெலிஸ் உருசியக் கூட்டரசு

(1%. 1918)

திறந்த நெஞ்சங்களுடன் ஒருங்ாள்

திறந்த உளங்கட்கு உரிய நாளிது விளம்புகிறேன் வருக அனைவரும்! குறுகிய சந்திப்பு இதுஎனினும் வருவார் தம்முள் ஒருசில ரேனும் என்னுடனே நிலைபெறும் நட்பில் என்றும் நெருங்கித் தங்கிடுவர். நல்லோர்ப் பிணைக்கும் இணைப்பை அறுத்தல் மிகஅரிது: பொல்லா மனிதரை விட்டுப் பிரிதல் மிகஎளிது. மூடிய முகங்க ளுடனே உட்புக எண்ணாதீர், மூடிடும் என்றன் உள்ளக் கதவும் உமைவெறுத்தே! புகழுரை சொல்லி மயக்கலாம் என்றோ, நினைத்தபடி வளைக்கலாம் என்றோ என்முன் கூனிக் குழையாதீர். நன்றிஃது அறிவீர், உண்மை நண்பர் உளம்வாழ்வர். என்றும் தாரேன் தீவழி யோர்க்குஎன் உளந்தனையே. இம்முறை யில் நான் சிலரை இனிதே எச்சரித்தேன். போக்கிலி கள்தாம் இடங்கல் மடங்கலாய் ஒடினரே. அன்னார் இழப்பால் வருத்தம் குழப்பம் சிறிதுமிலை. வட்டம் நெருங்கினும் வளையம் மிகமிக விரிந்ததுகாண். திறந்த நெஞ்சொடும் செப்புவேன்: எவர்க்கும் நல்வரவே.

233