பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்குப் போலத் திடும்எனத் தோன்றும்

பொல்லா எண்ணமுடன்

பொல்லாக் குடியர் தாள்.தடு மாறி

வயலுள் புகுந்தலைவர்.

இன்தே றல்விழா, இசைச்சுற் றாட்டம்

ஈர்க்கும் வெறிக்கூத்தில்

எல்லாம் மறந்து வழியும் தவறி

இசையால் கிளர்வுறுவார்.

புல்லாங் குழலை ஆர்பியன் ஊதிப்.

புதுமை செய்திடுவான்,...

இன்றும் கதும்என அடக்கம் அற்ற

எக்களிப் பெழுச்சியுடன்

இருளைப் பிளந்தே இன்னிசை ஒன்று

முழங்கிப் பரந்திடுமேல்

மென்யா மரத்தைப் பிளந்தொரு கத்தி

பட்டை கிழிப்பதுபோல்

மேன்மை மனத்தின் நிறை கிழித்து இசைதான்

கிறுக்கை விளைத்திடுமே.

24 0.