பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

அந்த்ரேய் வஸ்னலென்ஸ்கி உருசியக்

LLUTr (19. 1933) da

நிலம்

தூய ஆவியாய்த் துளிர்க்கும் மென்மையாய் நேயம் மிகுந்த நிலத்தினில் வெற்றுக் காலுடன் சுற்றிட விரும்புவோம். எங்கே? எதியோப்பி யாவிலா? அல்லது அவானாவிலா? இரைசொ னானின் நிழல்மிகு காவிலா? கதிரவன் காயும் சவானாவிலா? தொடர்பில் லாத தொலைவுப் பாங்கிலா? பெருமைக் குரிய பிறந்த இடத்திலா? நாங்கள் மாந்தர், நாங்கள் நிலத்தில் நடப்பதை விரும்புவோம். விடுதலை பெற்றநம் உடலின் வழியே மண்ணின் உயிர்விசை உருவிப் பாய்ந்திடும். நகர மக்களாய் நாம்ஆ னதனால் தரையின் பாவு கற்க ளாலும், விரைதொடர் வண்டிகளாலும், கருமை நிறத்துக் கமழ்வழி யாலும், பெருகும் உந்துார்தி களாலும்

41