பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிய மருப்பினைப் போல்பல கிளைகள்

வளைந்து குலுங்கி விசைந்தாடும்,

பொலியும் சுழல்பொறி போலமீன் ஒன்றின் விலாப்புறம் அசைந்து மின்னிடுமே.

சுருள்வில் விசையுடன் வெளிப்படு தல்போல்

சூழும் வலையில் கயல்துள்ளும்,

பெருவிண் பரிதி முகிலைக் கிழித்திடல்

பெருவியப் பாகும் மறக்கொனுமோ?

முளிதயிர் போல்அடர் மூடுப னித்திரை

அணில்கட்கு இனிய துறக்கந்தான்;

களிகொள் மகளிரில் பேறுபெற் றாய்நீ

காத்துளது உனக்கு வருங்காலம்.

மாசுகோ நகரில் விற்பனை மகளாய்

விளங்கினை; காட்டில் வந்துள்ளாய்,

கையில் சுத்தியல் களிப்புடன் தாங்கிக்

கடுகி எங்கே விரைகின்றாய்?

பந்தைப் போல் உயர் குதிகால் கள் மரப்

பலகை மீதில் தடதடக்கும்

அந்துயிற் காட்டை எழுப்பியும் விடுமே

அகற்றும் கரடித் துயிலினையும்,

குறும்பைப் பார்;அட, நிற்கும் போதில்உன்

காலைக் குத்திடும் சிறுசெடிகள்?

சிறிய முளைகள் நீஅடித் திடுவாய்

‘உலைக்களம்’, ‘ஆலை’ பட்டடையே.

சேக்குவிய ரில்ஒரு காட்சியி னைப்போல் காடுகள், போர்அரண், குன்றுகளே;

ஆக்கம் மிகும்மற அரிவையர் இங்கே

ஆட்டிப் படைப்பர் உலகினையே.

243