பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஸ்மெத் வர்கூன் அசர்பைசான்

(1906 - 1956)

ஏன் இந்த விரைவு ?

உடுக்கள் ஒளிரும் வானம் ...... ஆழ்கடல்...

முகந்து வீசும் பெருங்காற்றே.

எடுத்து மதுவைக் கிண்ணம் வழியவே

இட்டு நிரப்பி ஏந்துகின்றோம்.

“எளிதில் உலகை மறப்போம் வாராய்’’ என்று நானும் சொல்லுகிறேன்.

குளிரும் வந்தது நெருப்பை மூட்டிடு

கொழுந்து விடட்டும் என்கின்றேன்.

பொழுது கழித்தே புலர்க வைகறை போகாது இரவும் நீடுகவே. விழுதுறு நெருப்பின் அருகில் குந்துவேன் எண்ணச் சுழலில் மூழ்குகிறேன்.

கூறும்என் மொழிகள் அறிவுமேம் பாடு

கொண்டில; ஆயினும் பிழைஎன்ன? தேறும்என் நண்பன் அறிவுளான் ஆயின்

தெரிந்து கொள்வான் என்சொற்கள்.

244