பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மைராம்கான் அபில் கசிமோவா கிருசிஸ்யா

(&, 1936)

இன்இளவேனில் மலர்வளம்

மஞ்சளும் செம்மையும் மலர்ந்த பொன்மலர்! கொஞ்சமோ இன்இள வேனில் கூர்ந்தது! மிஞ்சுபேர் இன்பமாய் மிளிரும் புற்களும்! விஞ்சிய பெருமழை விளைத்த வண்மையே.

எழுச்சியை இன்இள வேனில் ஈந்தது, கொழுமைசார் புல்வெளி உலாவல் கொள்ளுவேன். விழுமைசேர் காதலில் மீண்டும் வீழ்குவேன்! செழுமையைச் செஞ்சொலால் பாடு வேன்.அரோ!

களிப்பதன் இன்கனல் கலக்கும் என்னுளே, குளிர்ந்தநல் நீரினைக் குடிக்க எண்ணுவேன் தளிர்த்திடும் களிப்பனல் தலைக்குள் ஏறலால் பிலிற்றிய களிப்பில்நான் பித்தி ஆகினேன்.

புற்றலை மழைத்துளி புதுக்கும் பொன்ஒளி: அற்புத ஒளிநகை அழைக்கும் அன்புடன்! இற்றைநாள் பிறந்ததாய் இலங்கும் வையமே. சுற்றிலும் ஒளிச்சுடர் வெள்ளம் குழுமே!

செழுமையின் கொழிப்பினில் சிறந்த ஆண்டிது; அழகிய புல்தலை பரிகட்கு ஈந்திடும். குழந்தையின் தொட்டிலைக் கொடுக்கும் இன்மரம்: எழுந்துயர் மலைவயின் இனிதின் ஓங்குமே!

4