பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பெல்லா அ.மதுலினIT உருசியக் கூட்டரசு

(o. 1937)

மார்கழி

குளிர்பணியின் காலவிதிக்கு உட்படுவோம் நாமே. குளிர்பணியின் ஒருதிரளை உருட்டிஒடு வோமே, திரட்டுதொறும் பெரிதாகக் கண்டுசிரிப் போமே, வழித்தெறிவோம் தேவையிலாப் பணியினையே நாமே.

நடந்துவழிச் செல்பவர்கள் நடப்பதுஎதோ என்று, கிடக்கும்ஒரு வேலியோரம் கேளிருடன் கூடி இடங்கொள்குளி ராலிதழ்கள் பற்களும் நடுங்கத் தொடங்கியநம் செய்பணியைத் துல்லியமாய்ப் பார்ப்பார்.

பனிஉருவ மாந்தனைநாம் படைத்துமகிழ் கின்றோம், பணிஉருவப் பணிசெயும்உன் கைந்நலமும் சேர்ந்து, வலிமையுடன் நெடிதான வன்பனியின் உருவம் நினைத்ததுபோல் வெளிப்படுங்கால் நெஞ்சில் மகிழ்வு என்னே!

கைத்திறமை காண்எனவே செப்புகிறாய் அன்ப! செய்திறனும் ஆர்வமுமே சேர்ந்துறவு கொள்ள மெய்யுருவம் ஆக்குகிறாய் வடிவிலாத ஒன்றில்: ஐயஉனை விரும்புகிறேன், விரும்புகிறேன் என்பேன்.

6