பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருந்து திரிந்த மண்ணில் ஏருந்து உழக்கும் இன்று போர்எரி மூண்ட மண்ணில் கோதுமை விதைவி தைப்பார்; சீர்அற்று மேடு பள்ளம் செறிந்தஇச் சாலை எல்லாம் சீருற்றே உந்து லாவும் செம்மையைக் காண்கின் றோமே.

புஷ்கின் மற்போர் பயின்ற சார்கோயி செலோ

துயரில் துடிக்கிறேன்! உன்னைப் பொசுக்கித் தரைமட்ட மாக்கினர்! பிரிவினும்இச் சந்திப்பு துயர்அளிக் கின்றதே! முன்பிங்கு- o நீரூற்று ஒன்று பேரொளி பொழிந்தது, சாலை மருங்கில்வாழ் கோல மரங்களின் இலைகள் சலசலத்து இன்னிசை பாடின; செங்கட லாக வான்சிவந் திருந்தது; இளவேனில் மண்ணின் வளந்தரு மணத்தை எல்லையற்று இனிய முத்தமாய் ஈந்தது.

2 நீண்ட நாளின் முடிவில் அழுகுணி மரங்களின் இலைகள் உதிர்ந்தன. அவற்றின் வெண்மை உயர்ந்து துலங்கி என்றன் பாடலில் இன்றிடம் பெற்றன. செம்மலர்ப் பூக்கள் செத்தன; ஆயினும், மாணவர் பாடல்கள் மடிந்தி டாமல் மருள்கூர் மாலைபோல் கற்பனைச் செவிக்கு விருந்தா கின்றன.