பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மார்கரீட்ட அலிகேர் உருசியக் கூட்டரசு

(19. 1915)

அருமருந் தன்ன ஷேக்ஸ்பியரின் துன்பியல்காள்! இடைக்காலத்து அரசர் வாழ்வின் நாடகங்காள்! உருகும் போர்ஒலி, விருந்தின் ஆரவாரங்கள் இருளும் ஒளியும், உணர்ச்சியின் பற்பல கூத்துகள்,

மதிப்பும் பண்பும் சூழ்ச்சியும் ஐயோ போராடும். இரண்டகம், அழிவு, உண்மையும் பொய்யும் மோதிடுமே, குதிப்பான் கொடியன் அரசைக் கைக்கொண்டு ஆண்டிடவே, குறையுற் றார்க்கே துணைநின் றார்ப்பான் பெருவீரன்.

இழிவுக் கொலைகள் இரத்தம் தோய்ந்த கொடுங்கைகள், நச்சுக் குவளை, இழுக்கின் கொலைவாள், எத்தனையோ? பொழியும் துன்பம், குழப்பம் இவைதாம் மானிடமோ? இரவில் புலம்பும் மக்கள் குரலின் முறையீடோ?

பழித்துரை, இயற்கை மீறிய செயல்கட்கு எக்காளம், ஊழொடு தருக்கம், பரிவே இல்லாப் போராட்டம் - கழித்துப் பார்த்தால் இவர்தாம் இவர்தாம் நிலமாந்தர்; ஒவ்வொரு வருமே வாழ்வின் உண்மை உணர்த்துவரே.

I I