பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் துன்பம், தவற்றின் கறைகள் அத்தனையும் பரபரப் பற்ற ஏக்கத் தனிமொழி ஆகிடுமோ? என்றும் அழியா வீறார்ந் துயர்ந்த ஒலியாக என்றன் அவலம் உருமாற் றங்கள் கொண்டிடுமோ?

என்றன் கவலை, வெற்றிகள் குறிக்கோள் எய்தாத

முயற்சி, தோல்விகள் இவையே யாவும் ஒருமாந்தன் தன்னுள் ஒடித் தொட்டிங்கு எழுப்பி வெற்றியினில் தலைநிமி ரத்தான் செய்திடும் ஆற்றல் உள்ளனவா?

அன்றி அருகில் கேட்கும் இன்னிசை ஒலிமங்கும் தொலைவின் இன்னிசை தெளிவாய் நிறைவாய் ஒலித்திடுமே! இன்றுநாம் எய்தும் இன்பம் துன்பம் இவைதாமும எழுதப் படலாம் நம்வர லாற்றின் முதல் ஏடாய்.

தற்கா லத்தின் மேன்மைவர லாற்று ஆசிரிய, எங்கள் துயரைத் தனதாய்ப் பாடும் பாவலனே! முற்கா லத்தை நோக்கும் பொழுதோ யாம் உண்ட உணவு துவர்ப்பாய், தண்ணிர் உப்பாய்க் காண்பாயே.

விழிப்பாய் இருப்பாய், நற்பெய ரைநீ கெடுத்துவிடேல், விலக்கும் குற்றம் செய்யேல், பொய்மை வீசிஎறி, சுளிக்கும் முகத்தைச் சிரிப்பென எண்ணி மயங்கிவிடேல், தோன்றும் கானலை நீர் என நம்பிப் பின்தொடரேல்.

பெண்காள்! ஆண்காள்! உம்முடை மாண்பார் வாழ்க்கையினால் பெரிதும் அவர்க்குத் துணைசெய் திடுவீர்; ஒருபோதும் பண்புகள் மாறா மாந்தர்க ளாக வாழ்ந்திடுவீர், வஞ்ச ராக நில்லீர், தோழமை முரிக்காதீர், உண்மையை மறையீர், தற்செருக் குற்றே அலையாதீர். ஒன்றும் இல்லை சொல்லிட என்ன உள்ளனவாம்? மாபெரும் பணிகள் செயல்கள் செய்யும் திறனின்றேல் திண்ணிய நெஞ்சால் சீர்தூக்கிச் செய்யும் பெரும்பணியில் சிலுகுகள் ஏதும் இடையூ றாகச் செய்யாதீர். விண்ணிலும் மண்ணிலும் உன்றன் கனவுக் கெட்டாமல் எண்ணில் பொருள்கள் இங்குள மறவேல் ஒரேஷியோவே!

12