பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

நிக்காலாய் அஸ்யேவ் உருசியக் கூட்டரசு

(d. 1889-1963)

கோடையின் முடிவு

கரும்பும் வேம்பும் பொருந்தும்என் பாடல்கள், புல்வெளிக் குளிரும் வெம்மையும் கொண்டவை; வேம்பாய்க் கசப்பினும் வெந்துயர் நீக்குமே, மென்மையும் கடுமையும் அவற்றில் விரவுமே.

மாந்தன்.இவ் வாடலைத் தேர்ந்ததும் இல்லை உலகமே அதனைக் கோள்களோடு ஆடிடும்; உலகைச் சுழற்றிடும் ஊழியாய்க் காலமாய் இரண்டற நிற்பவை என்பா டல்களே.

கார்சியா லோர்காவின் பாடல்

கார்சியா லோர்காவைச் சாவுக் கழைத்துச் செல்லுகையில் கார்ஒளி வானை ஏனோ வெறித்துப் பார்க்கின்றாய்?

‘வேலன்சி யாவும் ஆண்டல் சியாவும் இதையறியும் ஆயினும் கொலைஞரைக் கண்டவை அலறா திருந்தும்ஏன்?

1 5