பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொது முன்னுரை

யாம் அறிந்தவரையிலே, வேறு எந்த அரசும் மேற்கொள்ளாத ஒர் அரிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தானே முன்னின்று நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. தமிழில் உள்ள பேரிலக்கியங்களை உலக மொழிகளிலே மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுடைய பண்பாட்டையும் இலக்கியப் பாங்குகளையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டுமென்னும் நோக்கத் தோடும் உலக மொழிகளிலே உள்ள பேரிலக்கியங்களைத் தமிழாக்கம் செய்து, தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்வதோடு, இத் தமிழாக்கங்கள் தமிழிற்கே புத்துயிரும், புதிய வளமும் நல்க வேண்டுமென்னும் நோக்கத்தோடும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் இந்தத் தனிப்பெருந் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தொகை செலவானாலும் அவ்வளவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறது என்று பன்முறை அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதற்காக 8--5--78-ல் டாக்டர் திரு. ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் தலைமையில் கீழ்க்காணும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது:

1. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் திரு. கொண்டல் சு. மகாதேவன் அவர்கள் - செயலுறுப்பினர். இவர் இரண்டாண்டுகள் செயலுறுப்பினராக இருந்து, அவருக்குப்பின் தற்பொழுது தமிழ் வளர்ச்சி

iii