பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினங்கொள் ளாதே, சீர்சால் நிலமே!

மண்ணில் இருந்தெழும் விண்வெளிக் கப்பல் எண்ணிலாத் தொல்லை இழைத்திடும் போதும் அமைதியாய்ப் பொறுமைகொள். தழும்புண் டாக்கிக் கிளம்பட் டும்.அவை, மேலே பாய்ந்தவை சாலப் பறக்க உன்னை உதைத்துஅவை முன்எழ வேண்டும், பாங்குறு நிலமே தாங்கிக் கொள்வாய் இப்போது மட்டுமா? இனிஎப் போதுமே.

சினங்கொள் ளாதே, சீர்சால் நிலமே! எஃகு விரல்களால் இங்குநின் தசையினைக் கிழிக்கின் றோம்எனப் பழிக்கா தேநீ. எங்களின் ஆர்வம், பொங்கிடும் துணிவு ஊக்கத் தையெலாம் மன்னித் திடுகநீ - உன்றன் நெஞ்சின் ஆழத்து உட்போய் ஊன்றும் இரும்பு வேர்களைக் கொண்ட” புதிய மரங்கள் யாம்எனப் புகல்வோம்.

19