பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

ஒல்கா பெர்கோல்ட்ஸ் உருசியக் கூட்டரசு

(19. 1910)

என்னைப்பற்றி

போரமைதி ஒய்ந்தபின் போந்த அமைதியிலே ஒரமைதி நான்தேடி உள்ளம் புதைகின்றேன்...

நல்லதற்கோ தீயதற்கோ என்னுள்ளம் மாறியதே; சொல்லும் அளவிற்குத் தோதொன்றும் தெரியவில்லை. மிக்க கடுங்குளிர்க்கும் நடுங்கவைக்கும் மிடுக்கில்லை; ஒக்க நெருப்புக்கும் ஒகைதரும் வெப்பில்லை.

பெண்மைக்கு இயையாதுஎன் விண்மீன்கள் மேல்ஒளிரும் பெண்மைக் குழைவின்றிப் பாடும்.சீர் பீடுஇறுகும். கண் இமையா விண்மீன்கள், காரிருளில் போர்த்தீயால் துண்ணென்று எரியூட்டப் பெற்றபடி தாமுழங்கும்.

நிகழ்ச்சிகளை மறதியினால் நெகிழ்ந்துவிட நினைவோர்க்கே உகந்ததொரு நினைவுக் குறிப்பாக நான் இருப்பேன்; மக்களற்ற பாலைநிகர் மஞ்சள் பனியிடையே எப்படி வீழ்ந்துஅழிந்தார் லெனின் கிராட் மக்களகோ!

24