பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இயக்குநராக இருக்கும் திரு. டாக்டர் மா. நன்னன் அவர்கள் செயலுறுப்பினராக இருந்து வருகிறார்.

2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் - உறுப்பினர்.

3. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் - உறுப்பினர்,

4. சென்னை சாகித்திய அகாதமியின் தென்மண்டலச் செயலர் திரு. டாக்டர் சி. ஆர். சர்மா அவர்கள் - உறுப்பினர்.

மேற்கண்ட வல்லுநர் குழு உலகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களோடு தொடர்புகொண்டு உலக மொழிகளிலே தமிழாக்கத்திற்குத் தகுதியான பேரிலக்கியங்கள் எவை என்று பரிசீலனை செய்துவருகிறது; தமிழ் இலக்கியங்களில் எவற்றை அயல்மொழிகளில் மொழிபெயர்க்கலாம் என்பதையும் பரிசீலனை செய்து, இரு மொழிப் புலமையும், எழுத்தாற்றலும் பெற்றுள்ள அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த பேரிலக்கியங்களை மொழியாக்கம் செய்யும் பொறுப்பை வல்லுநர் குழு அவர்களிடம் ஒப்படைத்து வருகிறது. ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்து வல்லமை பெற்றவர் பலர் இருந்தபோதிலும் பிரஞ்சு, ஜெர்மன், டச்சு, இத்தாலியன், பெர்சியன், ஸ்பானிஷ், ரஷ்யன் முதலிய மொழிகளில் உள்ள பேரிலக்கியங்களைக் கற்று, அவற்றைத் தமிழாக்கம் செய்வதற்கோ, தமிழ்ப் பேரிலக்கியங்களை மேற்சொன்ன மொழி களில் மொழியாக்கம் செய்வதற்கோ வல்லமை பெற்ற அறிஞர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அத்தகைய அறிஞர்கள் வல்லுநர் குழுவுடன் தொடர்புகொண்டு, மொழியாக்கம் செய்ய முன்வருவார்களேயானால், அவர்களுக்கு ஆர்வம் ஊட்டி, அவர்களோடு ஒத்துழைக்க, இந்த வல்லுநர் குழு தயாராக இருக்கிறது. பத்தாவது நூற்றாண்டு முதல் பதின்மூன்றாவது

iv