பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ரீகர் பரதுாலின் பைலோரஷ்யா

(19. 1935)

இறக்கை பெற்ற இனக்குடும் பத்திலே, விண்வெளி வீரர்க்கு இரட்டை நான்தான் உந்து பொறியின் உறுமலி ரிைன்றும் புய்த்துக் கொண்டு போன வாஸ்டாக் மண்ணி னின்றும் என்னிட மிருந்தும் புய்த்துக் கொண்டு போயிற் றென்க. இடிமு ழக்கமும் விடியலின் செக்கரும் கொண்ட என்மனை விண்வெளி அகமே. ஈறிலா ஒன்று என்றன் துவலே! விண்கணை வடிவில் விண்மீன் ஒளிபோல் பசும்பொன் பூச்சில் நீபளிச் சிடுக. தாய்மைக் கைகளைப் பாடுகின் றேன்.நான் சிச்சிலிச் செரிகளின் சிவப்பொளி பாடுவேன். மெல்லிசை யோடும்என் மென்குரல் தாழ்ந்திட விரைவி லே,ஆம் விரைவிலே சுழற்சி வட்டப் பாதையில் பாடலை இசைப்பேன். விரைவிலே நெஞ்சின் ஆழத் திருந்து பரிதியை நோக்கிப் பாடிடத் தொடங்குமே.

27