பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயலுக்குப்பின்

புயலும் கடந்தது. தேன்சிட்டாய் நின்விழி பூரித்து உவந்திசைக் கூத்திடு கின்றன. புயல்மழை ஆடிய இன்கனி ஆப்பிள்கள் போற்றிக் கொணர்ந்தனை நின்பா வாடையில்.

கன்னிதின் மார்பகம் குன்றாய் விளங்கக் காற்றில் பறந்தது கச்சா டையும்: முன்நிலா மேல்நின்று வெயிலிற் கறுத்தஉன் முழங்காலைக் கெண்டையைப் பார்த்தே இளிக்கும்.

பூத்துக் குலுங்கித்தன் நாளைய குலங்கள் போர்த்தி மறைத்த கனிம ரம்நீ, கோத்த நினைவினைக் கண்களில் கொண்டுநீ, கோதை கவலை யற்றுஉவந் தனையே.