பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பெத்ருஸ் புரூவ்க பைலோரஷ்யா

(a. 1905)

கம்பு அடை

வெந்து கறுத்தநல் கம்பின்அடை - அதை விழைந்து மனமுந் தவித்திடுதே எந்தச் சுவையிதற்கு ஈடாகுமோ - என்கை எய்த எதற்குத் தரம்உளதோ?

வெந்து கறுத்தநல் கம்பின்அடை-அதன் வெந்த இருபக்கம் நோக்கிடுவீர் முந்து கமழ்எண்ணெய் வெங்காயம் - கொண்டு முத்துப் பொடியுப்புத் தூவியுண்பீர்.

பென்னம் பெரிய அடைஇதுதான் - வாய் மெல்ல மொறுமொறுப் போடினிமை துன்றும் இதற்குஇணை ஈடிலையே - சுவை சொல்லில் அடங்கிடு மாறிலையே.

வெந்து கறுத்தநல் கம்பின்அடை - நம் விடலைப் பருவத்து உணவிதுவே! முந்திடும் ஆவி பறக்கும்.அடை- நீர்ப் பஞ்சென முற்றும் பருத்திருக்கும்.

31