பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூதிர்கால மழையூடும் துயர்இருளின் ஊடும் மீதொளிரும் செப்பொளியாய் மின்னுவத னோடும் தீதியற்றும் சுழல்காற்றுத் திமிர்த்தலைக்கும் போதும் நோதல்இலாது அசைந்தாடி பாடிடும்ஆல் இலையே.

பனிக்காலம் கடுங்குளிரால் பகையாகி னாலும், பனிப்புயல்தான் கங்குல்தொறும் படைவீசி னாலும் பனிமழையைத் துணிவுடனே தான்மறைத்துக் கொண்டு கனிவுடன்தாய் மரக்கிளைக்குக் காப்பாகும் கிளையே.

இளவேனில் இனியபல வியப்பிழைக்கும் வேளை, உளமார வரவேற்கும், அதற்கடிமை ஆகும்; தளிரோங்கும் இளமைஇலை வளரஇடம் தந்து நிலமீதில் ஆலிலையும் மெல்எனத்தான் விழுமே.

33