பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 எமிலியான் புகோவ் மால்டேவியா

(la. 1909)

கெஞ்சின் ஆழத்தில் கிறைந்த சொற்கள்

மாந்தனுக் குயர்ந்த பாட்டினை அளித்து

மலர்முக முறுவல் மகிழ்ச்சியைப் பெறுகநீ! எய்திடும் சிறந்த பரிசிது வாகும்......

இருந்தும் நாணிடக் காலம் இருந்ததே. ஏந்து பட்டினி நிறைபழந் தெருவில்

உலர்ந்து வெடித்த உதட்டொடும் முனகினார் “ஆம்நீ ஒருதொழி லாளி எழுதுகோல்

அதன்பணி யாளனாய்க் கிட` என முனிந்தே.

அந்த நாளில் நான் அணிந்த ஆடைகள்

அழிவுறு கந்தலாய்ப் பஞ்சாய்ப் போனவை...

முந்தும் சொல்லினைத் திருகிக் கொணர்ந்திட

மூழ்கடா! மூழ்குநீ கடலின் அடியிலும்

வெந்திடும் பட்டினித் தெருவின் தொண்டையில் வெடித்தே எழுந்து கிளம்பிய அக்குரல்

தந்த நீதியின் தீர்ப்பினைப் போன்றதே

தக்க வண்ணம் பழியினைத் தீர்த்தல்போல்

முந்து சீற்றங் கிடந்தஅந் நெஞ்சினில் முரசம் ஆக எழுந்து கனன்றதே.

34